Thursday, December 4, 2014

காடு




செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
------------------------------------------------------------------------
              
          கற்றவர்களுக்கும் கல்லாத காட்டுவாசிகளுக்கும். நடக்கும் ஒரு விதமான இயற்கைப் போர்தான் இந்தக் காடு.
    காட்டை நேசிக்கும் நாயகன் பெயர் வேலு, காட்டை அழிக்கவும், தனது இனத்தைக் காட்டிக் கொடுக்கவும் செய்யும்கூடாக் குணத்தானின்பெயர் கருணா. இந்தப் பெயரைப் பாத்திரங்களுக்கு இட்டதாலே. இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கத்திற்கு தமிழ் தேசியப் பேராளிகளின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்த் திரைப்படங்களின் இயல்புக்குறிய காதல், நையாண்டிக் காட்சிகளைக் குறைத்து கொஞ்சம் பிசகி இருந்தாலும். பிரச்சார நெடி தவிர்க்க முடியாததாகியிருக்கும். அவ்வளவு ஆழமான புரட்சிக்குறிய பல கருத்துக்களை ஆங்காங்கே தெளித்திருக்கிறார் இயக்குநர். காடு பற்றிய தமிழின் இலக்கியத்தில் வரும் வார்த்தைகளை அடுக்கியதிலிருந்து இயக்குநரின் தமிழ் இலக்கியத்தின் மீதான பற்றையும் நமது பாரம்பரிய காட்டின் மீதான அறிவையும் வாழ்வியலோடு இணைத்துக்கொண்டவராக தெரிகிறார். பல்லுயிர்க் காடுகளில் 8ல் இரண்டு நம் நாட்டில் இருக்கிறது என புலிகள்பற்றி சொல்லும் இடத்தில் ஒரு இரட்டை அர்த்த வசனம் மேலிடுகிறது. பொதுவாக தமிழ் திரைப் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் என்றாலே அது பாலியல் தொடர்புடையதாக இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து இந்த வசனம் வரலாறுத் தொடர்புடையதாக இருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். மேலும் ”எட்டுத்திக்கும் எங்கள் பக்கம்பாடல் தமிழ் இளைஞர்கள் தங்களின் கைபேசி அழைப்பொலியாக மாற்றிக் கொள்ள தகுதி வாய்ந்த வரிகளாக இருக்கிறது.படத்தின் சில குறியீட்டுக் காட்சிகளான சிலவற்றில் ஒரு அரசியல் தன்மை மறைபொருளாக இருக்கிறது. குறிப்பாக ந்தா பாத்திரம் அதட்டியவுடன் கீழே விழும் அதிகாரச் சின்னமான லத்தி, ந்தா  நாயகன் வேலுவுக்கு கொடுக்கும் ஆடை, கூத்தாடிக் கலைஞர் பேன்றவைகள்.
    அரசியல்வாதிகளை விட அரசதிகாரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார் ஸ்டாலின். புழுக் கத்திரிக்காயில் ஒரு உலக அரசியலை புரியவைக்க முயற்சித்திருக்கிறார். உரிமைக்காக எதையும் இழக்கலாம் என்பது நம் கண் முன் நடந்த, கடந்த கால வரலற்றையும் நினைவுபடுத்துகிறார். புரட்சியாளர்கள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். கூடவே அதிகார வர்க்கம் நயவஞ்சகமாகப் பேசி காரியத்தைச் சாதிக்கும் என்பதையும் தோலுரிக்கின்றார். காடு, விஞ்ஞானி பேன்ற படங்களில் நமது பாரம்பரியம் பற்றியும் நாம் இழந்து தவிக்கும் அறிவு, வளங்கள் பற்றியும் அடுத்தடுத்து காணக்கிடைக்கிறது. இந்த தமிழ்த் திரைக் கலைஞர்கள் தமிழ்ப் பற்றுடனும், இந்த பாரம்பரிய வேர்களில் இருந்தும் வந்தவர்களாகத் தெரிகிறார்கள். இவர்கள் எதிர் வரும் காலத்தில் தமிழ் தேசிய கருத்துக்களையும் கலை, பண்பாடு,அரசியல்  முதலியவற்றையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கை கீற்றை ஏற்படுத்துகின்றர்

No comments:

Post a Comment