Friday, December 5, 2014

இலங்கை தமிழர் வரலாற்று சான்றுகள்..



இலங்கைத் தமிழர்கள் தமிழ் பேசும் மக்களாக தமிழகத்திலிருந்து புலம்பெயர முன்னரே அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்தனர்:

நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நாடுகளுள்; இலங்கையும் ஒன்றாகும். வரலாற்று எழுத்து மரபு தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்தே அது கட்டமைக்கப்பட்டிருந்தது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து இலக்கிய வழியிலான வரலாற்றைப் பெற்றிருக்கும் இந்நாடானது, அதிகளவில் பெரும்பான்மையினர் வரலாற்றைப் பேணும் நடைமுறையைக் கைக்; கொண்டுள்ளது. அதன்படி சிங்களவர் மட்டுமே இந்நாட்டின் பூர்வீக, நாகரீக நிலையடைந்த குடிகள். அவர்களுக்கு மட்டுமே இத்தீவும், அதன் அரசியலும், வரலாறும் உரித்துடையது எனும் தோரணையில் வரலாறு கட்டமைப்பு பெற்றிருக்கின்றது. ஆனால் ஏனைய இனங்களான தமிழர்கள்;, படையெடுப்பாளர்கள், வணிகர்கள், தற்காலிகமாக வந்து குடியேறியவர்கள், அக்கரையிலிருந்து வந்தோர் என மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதுவும் பிற்பட்ட காலங்களில் நிகழ்ந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அண்மைக் காலத்தில் விருத்தியடைந்து வரும் தொல்லியல் ஆய்வுகள் அதற்கு மாறான ஒரு எண்ணக்கருவை இலங்கை வரலாற்றுப் பார்வையில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது இலங்கையில் தமிழர்கள் தமிழ் பேசும் மக்களாக தமிழகத்திலிருந்து புலம்பெயர முன்னரே அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்துள்ளனர் என்பதை கண்டைந்துள்ளது. அதற்குப் பலநிலைப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இலங்கையில் இதுவரை அறியப்பட்ட தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இங்கு வாழந்த காலத்தால் முந்திய மக்கள் இடைக்கற்காலப் பண்பாட்டிற்கு உரியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மக்கள் மலைநாடு தொடக்கம் தாழ்நிலப்பகுதி வரையுள்ள நீர் நிலைகளையும். கடற்கரைப்பகுதிகளையும் அண்டி ஓரளவு செறிவாக வாழ்ந்துள்ளனர் என்பதை இரத்தினபுரி, பலாங்கொடை, கித்துள் கொட, அனுராதபுரம், இரணைமடு, திருகோணமலை, மாங்குளம், முல்லைத்தீவு, மாதோட்டம், பூநகரி ஆகிய இடங்களில் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றது. இலங்கையில் இப்பண்பாட்டின் தோற்றம் 28000 ஆண்டுகள் என காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இரத்தினபுரி, இரணைமடு போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இற்றைக்கு 125000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேலைப்பழங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளமைக்கான சான்றகள் கிடைத்துள்ளன. புல்மோட்டையில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இற்றைக்கு 500000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதப் படிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிரான் தொணியகல குறிப்படுகின்றார். ஆயினும் இன்றைய நிலையில் இலங்கையில் மனிதர் வாழத் தொடங்கியது இற்றைக்கு 28000 வருடங்களுக்கு முற்பட்ட இடைப்பழங்கற்காலத்திலிருந்தே வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகியிருக்கின்றது.

இப்பண்பாட்டு மக்களைத் தொடர்ந்து பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிட மக்கள் கி.மு.1000 தொடக்கம் வாழ்ந்ததற்கான தடயங்கள் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பொம்பதிப்பு, புத்தளம், அனுராதபுரம், பெரியபுளியங்குளம், திசமகாரகம, கதிரவெளி, கந்தரோடை, வல்லிபுரம், ஆனைக்கோட்டை, பூநகரி ஆகிய இடங்களில் இப்பண்பாட்டின் முக்கிய எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் இப்பண்பாட்டுடன் தான் அரசதோற்றம், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்புச் சிவப்பு மட்பாண்டப் பயன்பாடு என்பன தோற்றம் பெற்றுள்ளன. இலங்கையிற்; பரவலாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள இப்பண்பாடு பற்றிய சான்றுகள், இலங்கையில் நாகரீக வரலாறும், சிங்கள மக்களின் மூதாதையினரும் வடஇந்தியத் தொடர்பால் ஏற்பட்டதென்ற பாரம்பரிய பருத்தை முற்றாக நிராகரித்துள்ளன. இப்பண்பாடு தொல்லியல், மானுடவியல், சமூகவியல் ரீதியாகத் தென்னிந்தியாவுடன் குறிப்பாக தமிழ்நாட்டுடன் நெருங்கிய ஒற்றுமைத்தன்மையைக் கொண்டுள்ளது. இவ் இரு வகையான பண்பாடுகளும் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வகையில் காணப்படுவதால், திராவிட பண்பாடுகளுடன்; ஒப்பிட்டு நோக்கக் கூடியளவிலான பண்பாடுகள் இலங்கையில் முனைப்புக் கொள்ளத் தொடங்கி விட்டது.

பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்து முறையை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர். அது அப்பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் உருவான பிராமி எழுத்திற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்ததாகக் காணப்படுகின்றது. அவைகளில் தமிழ் பிராமி மற்றும் தமிழ் சொற்கள் இருந்துள்ளமைக்கு சான்றுகளுண்டு. இவற்றை இக்கால மக்கள் பயன்படுத்திய மட்பாண்டக் குறியீடுகளில் இருந்து அறியலாம். இவ்வகை எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் தமிழகத்திலும், இலங்கையிலுமே அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் ஆரிச்ச நல்லூரிலும், இலங்கையின் அனுராதபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் நவீன காலக்கணிப்பிற்குட்படுத்திய போது அவற்றின் தோற்ற காலம் கி.மு.1500க்கு முற்பட்டதென காலவரையறை செய்யப்பட்டுள்ளது. இக்காலக்கணிப்பு பௌத்த மதத்தோடு தமிழகத்திற்கு பிராமி எழுத்து வருவதற்கு முன்னர் தமிழகத்திலும் இலங்கையிலும் எழுத்தின் பயன்பாடு இருந்தமைக்கு ஆதாரமாக அமைகின்றது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எழுத்து வடிவங்கள் வடபிராமியுடனும், தமிழகப் பிராமியுடனும் பெருமளவு ஒத்ததாக காணப்படுகின்றது. ஆயினும் கூடியளவு தமிழ் மொழியின் செல்வாக்கை காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் வரும் (புழைத்தி முறி) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளமை தமிழ் மொழி பற்றிய ஆய்வில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. இதே போல் அனுராதபுரத்ததிலும், கந்தரோடையிலும், பூநகரியிலும், மாதோட்டத்திலும் அபிசிதன், ஈழ, ஈழவூர் போன்ற பெயர் பொறிப்புக்கள் மட்பாண்டங்களில் வருகின்றன. எனவே தமிழ் இனக்குழு வருவதற்கு முன்பே இங்கு வாழ்ந்துள்ளனர்.

சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் தம்து பெயர்களை முத்திரைகளில் பொறித்தமைக்கு கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து ஆதாரங்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டகளில் தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பல முத்திரைகள் கிடைத்துள்ளன. இலங்கையில்; ஆனைக்கோட்டை, பூநகரி, அனுராதபுரம் போன்ற இடங்களில் இவ்வகையான முத்திரைகள் கிடைத்துள்ளன. அனுராதபுரத்தில் கிடைத்த சுடுமண் முத்திரைகளில் பெருமகன் என்ற தமிழ் பெயர் பிராகிருதத்தில் பருமகன என எழுதப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டையில் கிடைத்த முத்திரையொன்று கோவேர என்ற சிற்றரசன் பற்றி குறிப்பிடுகின்றது. இது தமிழ் மொழி மரபில் கூறப்படுவதால் சிந்துவெளி குறியிடுகளையொத்த முற்பட்ட இப்பராமி எழுத்து வடிவம், தமிழ் மக்களின் வரலாற்றை பெருங்கற்காலத்திற்கு முன்; வரை நீடித்துச் செல்கின்றது. முத்திரை பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில் தமிழ் சிற்றரசன் ஒருவனை முத்திரை குறிப்பிடவதால் இக்காலத்திலேயே தமிழர்கள் இங்கு நிலைபெற்றுவிட்டனர் எனலாம்.

இலங்கையைப் பொறுத்தவரை இங்கு பயன்பாட்டிலிருந்த தொடக்க கால இனங்களை, அம்மக்கள் பயன்படுத்திய மொழிகளை ஆராய்வதற்கு தென்னாசியாவில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டுக்கு வந்த பிராமி எழுத்துப்பொறித்த கல்வெட்டுக்கள் முக்கியமானவை. அப்பிராமி எழுத்து முறை இலங்கைக்கு அறிமுகமானவிதம் தொடர்பாக பின்வரும் வரலாறு சொல்லப்படுவதுண்டு.

அசோகன்; ஆட்சியில் பௌத்தமதம் பரவியபோது அம்மதம் பற்றிய செய்திகளை கூறுவதற்கு முதன்முறையாக வட இந்தியாவிலிருந்து பிராமி எழுத்தும் பிராகிருத மொழியும் அறிமுகமாகியதாகக் கூறப்படுகின்றது. அப்பிராமி எழுத்துப் பொறித்த சாசனங்களே கி.மு.3ஆம்; நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தலிருந்துள்ளன. ஆயினும் அந்தம் பிராமி சாசனங்களில்; தமிழுக்குரிய அல்லது தமிழ் நாட்டுக்கு உரிய, அல்லது அவ்வகையையொத்த தனித்துவமான சில பண்புகள் காணப்படுகின்றது என தொல்லியலாளர்களான சந்தமங்கல கருணாரத்ன, ஆரிய சந்தமவச போன்றோர் குறிப்பிடகின்றனர். அவ் அம்சங்களில் முதலாவதாக அமைவது தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் ஆகும். இலங்கையில் காணப்பட்ட பிராமி சாசனங்களில் ள,ழ,ன போன்ற தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பிராமி சாசனங்களில் எச்சாசனங்கள் மிகத்தொன்மையானதென அடையாளம் காணப்பட்டனவோ அச்சாசனங்களில் பெரும்பாலும் தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்கள் காணப்பகின்றன. இதிலிருந்து அசோக பிராமி இங்கு அறிமுகமாவதற்கு முன்னரே தமிழ் எழுத்து வாசனையுடைய மக்கள் குழுமம் ஒன்று வழத் தொடங்கி விட்டதை அறியலாம்.

இலங்கையில் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மொழி பயன்பாட்டிலிருந்தது என்பதற்கு பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழ் பிராமி சான்றாகும். தமிழ்நாடு தவிர்ந்த இந்திய நிலப்பரப்பில் கர்நாடகம், தெலுங்கு, மராட்டி எனப்பல மொழிகள் பேச்சு வழக்கிலிருந்தும் கி.பி 4ஆம், 5ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. இலங்கை பிராமி கல்வெட்டில் பிராகிருதமாக இருந்த போதிலும்; கல்வெட்டுக்களில் தமிழ்ப் பெயர்களும், பிராகிருத மயப்பட்ட தமிழ்ப் பெயர்களும் பரவலாக காணப்படகின்றது. அப்பெயர்கள் பின்வருகின்ற நிலைகளில் தமிழர்கள் இலங்கையில் அக்காலத்திலேயே நிலை பெற்றுவிட்டமைக்கு சான்றாதாரங்களாக விளங்குகின்றன.
தனிநபர் பெயர்கள் தமிழ் மொழியில் அமைந்திருக்கின்றன. உதாரணமாக மல்லன், சுமண், பூதன், கசபன், நாகராசன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பெயரின் பின்னொட்டுச் சொல் 'அன்' என்ற விகுதியுடன் முடிவடைவதனால் இவை தமிழுக்குரிய பெயர்களென்பது உறுதியாகின்றது.
அடுத்து பிராமிக்கல் வெட்டுக்களில் தமிழுக்குரிய உறவுப்பெயர்கள் வருகின்றன. குறிப்பாக மருமகன், மருமகள், மறுமகன், மகள், பருமகள், பருமகன் போன்ற உறவுப் பெயர்களைக் குறிப்பிடலாம். பெரியபுளியங்குளம், அனுராதபுரம் போன்ற இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களில் இப்பெயர்கள் வருகின்றன. மேலும் தமிழ்; அரச உருவாக்கத்தின் தொடக்கத்தில் அதனை அழைக்கப் பயன்பட்ட சொற்களும் பிராமி கல்வெட்டுக்களில் வருகின்றது. ஆய், வேள் போன்றன அவ்வாறானவை. இச் சொற்கள் சங்க இலக்கியங்களில் குறுநில அரசர்களைக் குறிக்க பயன்பட்டதாகும். இது ராஜா என்ற பதத்திற்கு சமமானது என்பர். ரோமிலா தார்பர் அடுத்து தமிழ் இடப்பெயர்களும் கல்வெட்டுக்களில்; வருவதைக் காணலாம். நகர், மலை, ஊர், குளம், ஆவி, புரம், வாஷ போன்றன அவ்வாறானவை. எனவே இவை தமிழ் மக்கள் இங்கிருந்தே உருவாகியுள்ளனர்.

சமூகத்தில் செல்வாக்குடைய நபர்களால் மட்டும் வெளியிடப்படும் நாணயங்கள் கி.மு.3ஆம் நுற்றாண்டுக்கு முன்பே இலங்கையில் தமிழ்; அரச உருவாக்க பின்னணியில் வெளியிடப்பட்டுள்ளமைக்கு சான்றுகளுண்டு. பிராகிருத, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த நாணயங்கள் அக்குறு கொட, அனுராதபுரம், கந்தரோடை, பூநகரி போன்ற இடங்களில் மீட்கப்பட்டள்ளன. இவற்றில் உதிரன், மகாசாத்தன், கபதிகஜபன், கஜசென், திசபுர சடநாகராசன் ஆகிய தமிழ்; பெயர்கள் பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன. இதில் திச புரத்தை ஆண்ட கடதாக அரசனால் வெளியிடப்பட்ட நாணயங்களும் வருகின்றன. எனவே கி.மு.3ஆம். 2ஆம் நூற்றாண்டுகளில் தென்னிலங்கையில் தமிழ் இன குழும சிற்றரசுகள் உருவாகி விட்டன. இதனை மகாவம்சமும் உறுதிப்படுத்துகின்றது. துட்டகாமினி – எல்லாள போரில் 32 தமிழ் சிற்றரசுகளை அவன் தெற்கில் தோற்கடிக்க நேரிட்டதாக கூறுகின்றது.

இலங்கைக்கு தமிழர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து புலம்பெயர்ந்து வரும் முன்னமே இங்கு நிலை பெற்று விட்டனர் என்பதை பல்வேறு தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றது. இந்த முடிவானது இலங்கையின் உத்தியோகபூர்வமான வரலாற்று எழுத்தியலில் கண்டுகொள்ளப்படாத ஒன்றாக இருக்கின்றது...
நான்காம் தமிழ்ச் சங்கத்தின் கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்...

பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு...


பேராசிரியர் இரா.மதிவாணன் முல்லை.உதயதாசு-சுவிசு. அறிவாலயம்

உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் “பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா” எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் குமரி நாட்டுத் தமிழரின் கொடை என்பதை உலகம் அறியவில்லை. பழந்தமிழர் ஞாலமுதல் சுற்றுக்கடலோடிகள்

அந்நாள் முதல் வானநூலும் உயர்நிலை கணிதமும் ஒன்றுசேர வளர்ந்தன. “நிலக் கோட்டின் இருபாலும் 5 பாகை அளவுக்குள் புயல் உண்டாவதில்லை” உன்பதைப் பட்டறிவால் உணர்ந்தனர்.
ஆபிரிக்கக் கிழக்குக் கடற்கரை கெனியாவுக்கும் கீழ்க்கடலில் இந்தோனேசியா, சாலமன் தீவு, தென்னமெரிக்க பெரு நாட்டின் வடகோடிப் பகுதிகளுக்கும் விண்மீன் துணைக்கொண்டு கி.மு 4000 – 3000 காலத்திலேயே நெடும்பயணம் செய்தோராவர்.
வான நூலும் கணிதமும் வளர்ந்ததன் விளைவாக மேல் இலக்கத்தின் மேல் வரம்பையும் கீழ் இலக்கத்தின் (பின்னத்தின்) கீழ் வரம்பையும் கணிக்க முடியாதஎல்லையினைச் சுழியம் ’0’ எனக்குறித்தனர்.
கழியத்தின் நுட்பம்
ஒருநாளில் 60 நாழிகை முடிந்ததும் அடுத்த நாள் தொடங்குகிறது. அந்த நேரத்தைச் சுழிய நேரம் ( Zero Hour ) என்கிறார்கள். 9 ஆனதும் 10 ஐக் குறிக்க ஒன்றையடுத்துச் சுழியம் ’0′ இடுகிறோம். இதன் பொருள் என்ன? பத்தாம் இடத்தில் ஒரு பத்து முடிந்து விட்டது. பதினோராம் எண் ஒன்றாம் இட மதிப்பை நிரப்பும் வரையுள்ள இடைவெளி நேரத்தில் ஒன்றுமில்லாத தன்மையினைச் சுழியம் என்னும் வட்டம் உணர்த்திநிற்கிறது.
ஒன்று என்னும் எண்ணை அதிகப்படியாக எத்தனைப் பகுதிகளாகப் பகுக்க முடியும் என்னும் வினாவுக்கு விடை சொல்ல முடியுமானால் எண்ணிக்கைகளில் மிகப்பெரியபேரெண் எது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.
இருக்கும் பொருளைத்தான் பகுக்க முடியும். பொருளை பகுத்துக்கொண்டே போனால் ஒன்றுமில்லாத நிலை உருவாக்க முடியுமா? என்பது அடுத்த வினா. ஒன்றுமில்லாத நிலை உருவாக்க முடியாது என்பதே விடை.
ஏதோ ஒரு கடைசி எல்லையில் மிகச் சிறிதாகிய நுண்ணணு மேலும் பகுக்க முடியாத நிலையில் இருந்தே ஆகவேண்டும் என்பதை ” Atom can neither be created nor destroyed ” என அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஒன்றுமில்லாத நிலை உருவாகாது. அப்படியானால் ஒன்றுமில்லாதது என நாம் கருதும் சுழியம் எதைத்தான் குறிக்கிறது? இதற்குத் தொல்காப்பியர் இன்மை எனப்பெயரிட்டார்.

தொல்காப்பியரும் ஐன்சுடீனும்
பொருளின் பகுப்புகளில் ஒன்றுமற்ற நிலை உருவாக்கமுடியாது. ஒரு பொருள் மற்றொரு பொருளாகும் வளர்ச்சிநிலை அல்லது அழிவு நிலைகளின் நுடண்ணிய இடைவெளி நேரத்தைத்தான் ஒன்றுமில்லாத இடைக்கால நிலை என்று சொல்ல முடியும்.
பொருளைப்போலவே காலத்தை எத்தனைக் கூறுகளாகப் பகுத்தாலும் ஒன்றுமற்ற இடைவெளியைக்காண முடியுமா? என்பது அடுத்த வினா.
காலம் ஐம்புலனுக்குப் புலனாகாது. அறிவால் மட்டும் உய்த்துணரமுடியும். பொருளைத் தனியாகப் பிரித்தால் காலம் என்பது ஒன்றுமில்லாததாகிவிடும். அதாவது, பொருளற்ற நிலையைக் காட்டும் இல்லாத நிலையை உணர்த்தாது. ஆதலால் காலமும் உள்ளதாகிய கருத்துப் பொருளே.
தொல்காப்பியர் கருத்துப் பொருளாகிய காலத்தையும் இடப்பரப்பாகிய பருப்பொருளையும் ஒன்று சேர்த்து, “காலமும் இடனும் முதற் பொருளென்ப” என்கிறார்.
பொருளிலிருந்து காலத்தைப் பிரிக்க முடியாது. காலத்திலிருந்தும் இடத்தைப் பிரிக்க முடியாது. இதனை ஐன்சுடீன் பெருமகனார் “பொருளின் நீள, அகல, உயரம் எனும் கன அளவோடு காலத்தையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும்” என்றார். இதுவே தொல்காப்பியர் கருத்துமாகும்.
பொருள் உடம்பு என்றால் காலம் உயிர். பொருளின் இடைவிடாத இடமாற்றங்களின் ஊடே நிலவும் மிகச்சிறிய இடைவெளி நேரம் ஒன்றுமில்லாதது போல் தோன்றுகிறது. அதுவே சுழியமாகக் கொள்ளப்படுகிறது.

காலத்தின் இடைவெளியும் கருந்துளைக் கோட்பாடும்
ஒன்றைப் பகுத்துக்கொண்டே போனால் மேலும் பகுக்க மடியாத ஒரு கட்டத்தில் அந்தப் பகுப்புக்கள் குறிப்பிட்ட சேர்மானங்களில் (விகிதங்களில்) ஒன்றுகூடி மீண்டும் பொருள்களாவதற்குரிய இடைவெளி நேரம் சுழியமாகக்கருதப்படும். மேல்வாய் பேரெண்ணும் கீழ்வாய் இலக்கக் கடைக்கோடி எண்ணும் சமமாகக் கூடும். பேரண்டச்சுழற்சியும் வட்டமாகவே அமையும்.
பேரண்ட அழிவுக் காலத்தில் எல்லா உலகங்களும் கருந்துளைக்குள் ( Black Hole ) சென்று மீண்டும் வெடித்துப்பழையபடி உலகங்களாகின்றன என்பதால் இவ்வட்டச் சுழற்சியை உணர முடிகிறது. இச்சுழற்சியில் பொருள் திரிவு இடைவெளிகளும், காலக்கழிவு இடைவெளிகளும் சுழியத்தின் பொருளைப் புலப்படுத்துகின்றன. இந்தக்கால இடைவெளியைப் பாழ் எனப்பழந்தமிழர் குறிப்பிட்டனர். இச்செயல் பூஐயம் என வடநாட்டு மொழிகளில் திரிந்தது. சுழியம் என்னும் சொல் வடமொழியில் சூன்யம் எனத்திரிந்தது.

பரிபாடலில் “பாழ்” எனும் சொல்
தமிழறிஞர்களுள் மெய்யுணர்வாளர்களாகிய அறிவர் என்போர் வாநூல், கணிதம் ஆகியவற்றில் வல்லுநராகி உலகப் படைப்பின் நுணுக்கங்களையும் ஆராய்ந்தனர். ஐம்பூதங்களில் நிலம் நீரில் கரைகிறது. நீர் நெருப்பில் ஒடுங்குகிறது. நெருப்பு காற்றில் ஒடுங்குகிறது. காற்று வானத்தில் ஒடுங்கும். வானமும் ஒன்றுமில்லாமல் பாழ்நிலை எய்திக் கருந்துளைக்குள் போய்விடும். இதனை “விசும்புஇல் ஊழி” (பரிபா.2) என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.
ஓன்றென பாழென
ஒன்றுமற்ற இடைக்காலச் சுழிய நேரத்தைப் பாழ் என்னும் சொல்லால் குறித்திருப்பது இதன் கண்டு பிடிப்பாளர்கள் தமிழர்களே என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆரியர்களின் வேதத்தில் சுழியத்தைப்பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. தமிழர்களின் கணித நூல்களிலிருந்தே வடமொழியாளர் கணக்கறிவு பெற்றுள்ளனர். வடமொழியில் கணிதம், வானநூல், மருத்துவம், மெய்யியல், ஓகம், ஊழ்கம்(தியானம்) ஆகியவற்றை முதலில் மொழிபெயர்த்தோர் அனைவரும் பிற மொழியாளராகவே இருத்தல் அறிதற்பாலது.
தமிழர்களிடமிருந்தே 1,2,3,4,5,6,7,8,9,10 எனும் எண் வடிவங்களே அரேபியர் மற்றும் பொனீசிய வணிகர்களின் வாயிலாக உலக முழுவதும் பரவியுள்ளன என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
ஆகிங்கின் காலக்கோட்பாடும் காலச்சுழிக்கணக்கும்.
காலத்தின் வரலாறு Brief History of Time என்னும் தலைப்பில் விற்பனையில் முதலிடம் பெற்ற அரிய ஆய்வு நூல் எழுதிய அமெரிக்கப் பேரறிஞர் தீபன் ஆகிங் (Stephen Hawking) தன்னுடைய நூலில் ” Time starts with a big bang and mightend with big crench” எனக்குறிப்பிட்டுள்ளார்.
காலத்தின் தோற்றமே அண்டத்தின் தோற்றம். காலத்தின் முடிவே அண்டங்களின் முடிவு எனும் ஆகிங் கருத்து “தோற்றமே துடியதனில்” எனும் சிவனியக் கொண்முடிபை நினைவுபடுத்தும் போதே காலச் சுழற்சியின் மிகப்பெரிய இடைவெளி சுழிய வட்டத்தையும் நினைவுப்படுத்துகிறது.
கால இடைவெளி எனும் சுழியம் இல்லாதிருந்தால் ஒன்று எங்கே முடிகிறது. இரண்டு எங்கே தொடங்குகிறது என்பது தெரியாததால் 1,2,3 என எண்களைப் பிரித்தறியும் வரம்பு கிட்டாமல் போயிருக்கும்.
உலகின் கணிதக் கலை வளர்வதற்கு ஊன்று கோலான பழந்தமிழரின் சுழியக் கண்டுபிடிப்புக்கு உலகமே நன்றி செலுத்தக்கடமைப்பட்டுள்ளது. இந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு உரிமையாளரும் தமிழரே என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

சுழியம் ஏன் தோன்றியது?
கடல்கொண்ட தென்னாட்டில் நடைபெற்ற தமிழ்க் கழகப்புலவர் பேரவை முத்தமிழ் இலக்கியப் பாங்குக்கு அடிப்படையான எண்ணும் எழுத்துமாகிய இலக்கணப் பாகுபாடு சிந்தனையைத் தூண்டி தருக்கம் எனும் ஏரண எதிராடல்கலையை வளர்த்தது. முதற்பொருள் கருப்பொருள் தொடபான உரையாடல்கள் ஐம்பூதங்கள் கலந்த மயக்கம் உலகம் என்றும் அதற்கு அடிப்படை அணுக்கொள்கை என்றும் முடிவு கண்டன: இதனைக்கண்ட அறிவர் இதற்குக் காட்சி அளவை (தர்சனம்) என்றனர்.
இந்த அளவையில் இன்மை என்பதும் ஒர் உள்பொருளாகக் கருதப்பட்டதால் இன்மையைக் குறிக்க சுழியம் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.
சுழியம் எங்குத் தோன்றியது?
சுழியம் தொடர்பான கருத்துகள் கடல் வணிகர்வழி பல நாடுகளுக்குப் பரவின. சுமேரிய பாபிலோனியரிடையிலும் பெரிய வட்டம் பத்தைக் குறித்தது. கி.மு.4000 அளவிலேயே இது அங்குப் பரவியிருப்பதால் கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் வாழ்ந்த கணியரும் அறிவருமாகிய வானநூல், கணித நூல் வல்லுநரிடை இது தோன்றியதாகும். சிந்து வெளி மக்களிடையிலும் 10:100 எனப்பதின்(தசம) மடங்கு எண்கள் தென்னாட்டுத் தமிழரிடமிருந்தே சென்றுள்ளன என்பதும் கருதத்தக்கது.
சுழியம் எப்படித் தோன்றியது?
எண்களை ஏறு வரிசையிலும் பெருக்கல் வரிசையிலும் கனம் எனும் அடுக்கு வரிசையிலும் 1/320 முதல் 1/320X320 எனும் முந்திரி, கீழ் முந்திரி வரிசையிலும் கணக்கிட்ட பந்தமிழர் நீட்டல் அளவையைப் பத்தின் அடிப்படையான பதின் (தசம்) அளவாகக் கொள்ளவில்லை. நீட்டல் அளவுக்குரிய கோலின் நீளத்தை 11 அடியாகக் கொண்டனர். இது வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடுவதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட நீட்டல் அளவு. இதன் காற்பகுதியாகிய 2 ¾ அடி கோயில் கட்டும் கம்மியருக்கான தச்சு முழம் எனக்கூறப்படுகிறது.
வட்டத்தின் விட்டத்தை ஏழு சம கூறாக்கி அதனொடு 4 சமக்கூறுகளைச் சேர்த்து இரண்டால் பெருக்கினால் 7+4=11X2=22 சமக்கூறுகளாகிய வட்டத்தின் சுற்றளவு கிடைக்கும் என்பது இன்று படிப்பறிவில்லாத தச்சருக்கும் தெரிந்த தலைமுறைத் தொடர்பு அறாத கலையறிவு. 22/7 என்னும் கணக்கு நுட்பம் குமரிக்கண்டத்துத் தமிழரிடமிருந்தே உலக நாடுகளுக்கும் புரவியுள்ளது.
இரண்டாம் தமிழ்க் கழகம் தொடங்கிய பாண்டியன் வெண்தேர்ச்செழியன் தேருடையவன் என்பதால் சக்கரத்தின்சுற்றளவும் வட்டத்தின் பரப்பளவும் காணும் கணக்கு நுட்பம் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழருக்குத் தெரிந்திருந்தது என்பது புலனாகிறது.
எப்பொழுது தோன்றியது?
இடைக்காலச் சோழர் காலத்தில் 11 அடி அளவுகோலே வழக்கத்திலிருந்தது. சிந்து வெளியிலும் அரப்பா மொகஞ்சதாரோ நகரங்களில் உள்ள தெருக்களாக 22,33,44 அடி என்னும் அடி நீட்டல் அளவுடையனவாக இருந்தன. மதுரை போன்ற மூவேந்தர் தலைநகரத் தெருக்களின் அளவும் 11 அடியினஇ மடங்குகளாக 33,44 அடிகளாகவே உள்ளன. எனவே, சிந்துவெளி நாகரிகக் காலம் கி:மு. 3500 என்றதால் கி.மு. 4000 அளவிலேயே 11 அடி நீட்டல் அளவுகோல் தோன்றியிருக்க வேண்டும்.
எத்துணைப் பொüய நேர்க்கோடாக இருந்தாலும் அது மிகப்பெரிய வட்டத்தின் பரிதியில் சிறு நேர்க்கோடாக இருக்கும் என்பது கணித நூல் கண்டறிந்த உண்மை,5 ½ அடி உயரமுள்ள வண்டிச் சக்கரத்தின் சுற்றளவு 16 ½ அடி. ஒரு வண்டிச் சக்கரம் 320 சுற்றுச் சுற்றினால் அது சென்ற தொலைவு ஒரு கல் (மைல்) ஆகும் என்பதும், இது உலகம் முழுவதும் பரவியுள்ளதால் இதன் தொன்மையையும் கணித்தறியலாம்.
சுழியத்தை கண்டுபிடித்த தொல்கணியாதன்?
இன்மைக்கொள்கை தமிழருடையது. அணுக்கொள்கையில் ஏரணப் பிரிவுகளில் இதுவும் ஒன்று. இதனை
அண்மையின் இன்மையின் எண்மையின்
வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும்….. தொல். செய்யுள்214. எனத்தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வித்திலிருந்து மரம் உண்டாகிறது. வித்தினைப் பார்க்கும்பொது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியாகும்போது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியான பிறகு வித்தினைப் பார்க்க முடிவதில்லை.
வித்தில் மரம் தெரியாதது இன்னை. அதனால் மரம் இல்லை என்று பொரு கொள்ள முடியாது. இன்மையாகிய பொருள் உள்ள பொருளே. ஆதலால் சுழியத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படாத உண்மையாயிற்று. இதனைப் பக்குடுக்கை நன்கணியர், கணியாதன் ஆகிய கணியவியல் அறிவர்கள் உலகிற்கு உணர்த்தினர். நாளடைவில் ஆசிவகம் எனப்பட்ட இக்கோட்பாடு சாங்கியம், வைசேடிகம், உலகாயதம் எனும் பெயர்களில் நாலாத் திசையும் பரவிற்று.
பக்குடுக்கை நன்கணியார், கணியாதன் ஆகியோர்க்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கணியர் மரபில் தோன்றிய தொல்கணியாதன் என்பவரே முதன்முதல் இன்மைக் கோட்பாட்டினையும் சுழியத்தையும் வண்டிச்சக்கரத்தின் சுற்றளவு வாய்பாட்டையும் கண்டறிந்தவர் என்னும் செய்தியும் வள்ளுவக் கணியரின் செவிவழிச் செய்தியாக நிலவுகிறது.
சுழியம் எவ்வாறு பரவியது?
சாலைகளின் நீளம் காண 11 அடி கோலின் வழி வந்த காதத் தொலைவைக்குறிக்க, காதவழிக் கற்கள் தரைவழி வணிகர்களின் நலன் கருதி நடப்பட்டன. கடல்வழிப்பலணம் சொல்வோர்க்கு விண்மீன்களின் சுற்றுச்செலவுகளே எல்லை காட்டும் குறியீடுகளாயின.
புயல் வீசாத கடல் பாதையாகிய நில கடுக்கோட்டு இருமருங்கு 5 பாகை வழியாக ஈசுடர் தீவில் சிந்துவெளி முந்து எழுத்துக்களைப் பயன்படுத்தியோரும் அமெரிக்காவில் குடியேறிய இன்கா மாயர் பழங்குடிகளும் உயர்ந்த வானநூல் கணிதநூல் வல்லுநராகக் குடியோறியுள்ளனர்.
அணுக்கொள்கையின் உட்பிரிவாகிய இன்மைக்கொள்கை சுழியமாகக் கருதப்பட்டது. இது மெய்யியல் ஓகம், ஊழிகம் (தியானம்) மந்திரம் ஆகிய பழந்தமிழர் நான்மறைக்கொள்கைக்கு வித்தாயிற்று. அறம், பொருள், இன்பம், எனும் முப்பால் பகுப்பு இல்லற வாழ்க்கைக்கும் மெய்யியல் முதலாகிய நான்கும் துறஹக் கோட்பாட்டுக்கும் நிலைக்களங்களாயின.
பக்குடக்கை நன்கணியாரும் கணியாதனாரும் கண்டறிந்த சிறப்பியம் எனும் ஆசீவக அணுக்கொள்கையை வடநாட்டிலும் பரப்பியதால் மற்கலிகோசர் இதனை மேலும் விரித்துரைத்தார். வடபுலத்தார் சாங்கியம், யோகம், உலகாயதம் எனும் கோட்பாடுகளை வளர்த்துக்கொள்ளவும் புத்த, சமண சமயத்தார் அணுக்கொள்கையையும் இன்மைக் கோட்பாட்டினையும் அடிப்படையாகக் கொள்ளவும் இது வழி வகுத்தது.
எண்கணிதம் இடையறவின்றிப் பல அடுக்கு எண்களாக வளர இன்மைக்கொள்கையின் புற வடிவமாகிய சுழியம் உதவியது. இதனால் தமிழில் பத்து இலட்சத்தைக் குறித்த நெய்தல், கோடியைக் குறித்த குவளை அதன் பன்னூறு மடங்கு அடுக்குகளைக் குறித்த ஆம்பல், தாமரை, வெள்ளம், ஊழி போன்ற பேரெண்கள் மிக எளிதாக உருவாயின.
சுழியத்தின் பயன்பாட்டால் வணிகம், வானநூல் கணிப்பு, கணிதக் கலையின் வளர்ச்சி கட்டடக் கலை, பொறியியல் ஆகிய பல்வகை அறிவியல் வளர்ச்சி விரைவுபட்டது.
உலக மக்கள் தமிழரின் சுழியம் கண்டுபிடிப்புக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

Thursday, December 4, 2014

காடு




செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
------------------------------------------------------------------------
              
          கற்றவர்களுக்கும் கல்லாத காட்டுவாசிகளுக்கும். நடக்கும் ஒரு விதமான இயற்கைப் போர்தான் இந்தக் காடு.
    காட்டை நேசிக்கும் நாயகன் பெயர் வேலு, காட்டை அழிக்கவும், தனது இனத்தைக் காட்டிக் கொடுக்கவும் செய்யும்கூடாக் குணத்தானின்பெயர் கருணா. இந்தப் பெயரைப் பாத்திரங்களுக்கு இட்டதாலே. இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கத்திற்கு தமிழ் தேசியப் பேராளிகளின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்த் திரைப்படங்களின் இயல்புக்குறிய காதல், நையாண்டிக் காட்சிகளைக் குறைத்து கொஞ்சம் பிசகி இருந்தாலும். பிரச்சார நெடி தவிர்க்க முடியாததாகியிருக்கும். அவ்வளவு ஆழமான புரட்சிக்குறிய பல கருத்துக்களை ஆங்காங்கே தெளித்திருக்கிறார் இயக்குநர். காடு பற்றிய தமிழின் இலக்கியத்தில் வரும் வார்த்தைகளை அடுக்கியதிலிருந்து இயக்குநரின் தமிழ் இலக்கியத்தின் மீதான பற்றையும் நமது பாரம்பரிய காட்டின் மீதான அறிவையும் வாழ்வியலோடு இணைத்துக்கொண்டவராக தெரிகிறார். பல்லுயிர்க் காடுகளில் 8ல் இரண்டு நம் நாட்டில் இருக்கிறது என புலிகள்பற்றி சொல்லும் இடத்தில் ஒரு இரட்டை அர்த்த வசனம் மேலிடுகிறது. பொதுவாக தமிழ் திரைப் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் என்றாலே அது பாலியல் தொடர்புடையதாக இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து இந்த வசனம் வரலாறுத் தொடர்புடையதாக இருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். மேலும் ”எட்டுத்திக்கும் எங்கள் பக்கம்பாடல் தமிழ் இளைஞர்கள் தங்களின் கைபேசி அழைப்பொலியாக மாற்றிக் கொள்ள தகுதி வாய்ந்த வரிகளாக இருக்கிறது.படத்தின் சில குறியீட்டுக் காட்சிகளான சிலவற்றில் ஒரு அரசியல் தன்மை மறைபொருளாக இருக்கிறது. குறிப்பாக ந்தா பாத்திரம் அதட்டியவுடன் கீழே விழும் அதிகாரச் சின்னமான லத்தி, ந்தா  நாயகன் வேலுவுக்கு கொடுக்கும் ஆடை, கூத்தாடிக் கலைஞர் பேன்றவைகள்.
    அரசியல்வாதிகளை விட அரசதிகாரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார் ஸ்டாலின். புழுக் கத்திரிக்காயில் ஒரு உலக அரசியலை புரியவைக்க முயற்சித்திருக்கிறார். உரிமைக்காக எதையும் இழக்கலாம் என்பது நம் கண் முன் நடந்த, கடந்த கால வரலற்றையும் நினைவுபடுத்துகிறார். புரட்சியாளர்கள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். கூடவே அதிகார வர்க்கம் நயவஞ்சகமாகப் பேசி காரியத்தைச் சாதிக்கும் என்பதையும் தோலுரிக்கின்றார். காடு, விஞ்ஞானி பேன்ற படங்களில் நமது பாரம்பரியம் பற்றியும் நாம் இழந்து தவிக்கும் அறிவு, வளங்கள் பற்றியும் அடுத்தடுத்து காணக்கிடைக்கிறது. இந்த தமிழ்த் திரைக் கலைஞர்கள் தமிழ்ப் பற்றுடனும், இந்த பாரம்பரிய வேர்களில் இருந்தும் வந்தவர்களாகத் தெரிகிறார்கள். இவர்கள் எதிர் வரும் காலத்தில் தமிழ் தேசிய கருத்துக்களையும் கலை, பண்பாடு,அரசியல்  முதலியவற்றையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கை கீற்றை ஏற்படுத்துகின்றர்

Wednesday, December 3, 2014

விளாம் பழம்!!


விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..



சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

ஆமைகளின் கடல் வழியில் கடலோடும் தமிழரின் கடல் மேலாண்மை!!



தமிழர்களின் தொன்மையை பற்றி ஆய்வு செய்து வரும் என்னை வியக்க வைப்பது உலக நாடுகளில் உள்ள தொன்னூருக்கும் மேற்பட்ட மொழிகளில் திராவிட என்று சொல்லபட்ட தமிழ் மொழியின் கூறுகள் அதன் பண்பாடுகள் நிறையவே இருப்பதும் இந்தோ ஐரோப்பிய கடற்கரை மொழிகள் அனைத்திலும் தமிழ் மொழியின் கூறுகள் அதன் பண்பாடுகளின் தாக்கங்கள் பிணைந்து நிற்பதும்

உலகம் முழுவதும் உள்ள அணைத்து கண்டங்களிலும் தமிழ் பரவல் இருப்பதும் அதை ஒப்பிட்டிவியல் மொழி வழியாக அனைவரும் பேசி வரும் இக் காலத்தில்

அதற்கான தமிழியல் தரவுகளை கடலியல் மூலமாக தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நான்

ஒரிசாவில் இருபது வருடம் வாழ்ந்து தமிழ் சங்க பணிகள் செய்து
அங்கு உள்ள உள்ள தமிழர்களை ஒன்று சேர்த்து அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து ,கலிங்க ஈழ தமிழ் உறவுகளை பற்றி ஆய்வு செய்து அதன் பின்னால் குமரி கடல் ஆய்வுகள் செய்து உலகின் மேற்கு பகுதிகளையும் ,கிழக்கு பகுதிகளையும் கடல் மூலமாக இணைத்தவர்கள் அகண்ட தென் தமிழக கடலோடிகள் என்று நிருபிக்கும் நேரத்தில்
கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம்.

ஒரிசாவில் இருபது வருடம் வாழ்ந்தவன் நான்

லெமுரிய ,குமரிக்கண்டம்,கடல் கொண்ட தென்னாடு என்று மூழ்கிய நிலங்களை ,கடலில் இருக்கும் நமது பண்டைய துறைமுகங்களை பற்றி பல வருடங்களாய் ஆய்வு செய்து வரும் எனக்கு என் ஆய்வுகளில் ஒரு பகுதியான இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு வியப்பான நிகழ்வு தெரிய வந்தது

உலகில் கடல் ஆமைகள் பல கோடி வருடங்களாய் வாழ்ந்து வருகின்றது
மனிதர்களின் காலமோ நான்காம் பனி காலத்திற்கு பிந்தைய சில இலக்க வருடங்கள் தான்

உலகத்தில் முந்நூறு வகையான ஆமைகள் இருந்தாலும் இன்று ஆய்வாளர்கள் ஆமைகளை எழு வகையாக பிரித்து வைத்து இருகிறார்கள்
கால்கள் இருந்தால் அதற்க்கு tortoise எனவும் ,இறக்கைகள் இருந்தால் அதற்க்கு marine turtles என்று பெயரும் வைத்து உள்ளார்கள்
நமது கடலில் பங்குனி ஆமை ,அழுந்காமை,பச்சை ஆமை,கிளிமூக்கு ஆமை, தோணி ஆமை என்ற ஐந்து வகை ஆமைகள் வருகின்றன ,
அருமையான தட்ப வெப்ப சூழல் இருப்பதால் இனபெருக்கம் செய்ய கல் புற்களும் அதற்க்கு தேவையான ஜெல்லி இன மீன்களும் கிடைபதால்
சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் கிலோமீட்டர்கள் இந்தோ பசிபிக் கடல் நீரோட்டங்களில்
அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயற்கைக்கோள் சாதனம்)RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் நிகழ்வுகள் தெரிய வந்தது

ஒரிசாவில் வாழ்ந்ததால் பல வருடங்கள் கஹிர்மாதா தேவி பட்டினம் ,ருஷிகல்யா போன்ற பகுதிகளில் வரும் ஆமைகளை காண பல முறை சென்று இருக்கிறேன் ,அதன் அருகில் தான் தென்கிழக்கு ஆசியாவுடன் தொடர்பு கொண்ட பாலூர்,தேவிபட்டினம்,தாமர போன்ற பண்டைய துறைமுகங்களும் இருந்தன ,தான் முட்டை இடும் இடத்தை தேடி வரும் ஆமைகள் , ஆமைகளின் குட்டிகள் கூட தான் பிறந்த இடத்தை தேடி மீண்டும் இனபெருக்கம் செய்ய வருவது ஆமைகளின் சிறப்பு

. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன.

அப்படி அவை கடந்த கடற்கரைகளை பன்முக பறவையில் ஆராய்ந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து.

ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் இன்று உள்ள துறைமுகங்களும் அவற்றில் 1300 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

மியான்மர் -தமிழா காஞ்சி -

மலேசியா- சபா சந்தோகன்
ஆஸ்திரேலியா- கூலன்,மண்ணின் கிரீட தமிழி கிரீக் , சோழவன், ஊரு,

நியூசீலாந்து - வான்கரை, ஓட்டன்கரை, குமரா-

ஸ்பெயின்- மலகா கடலன் ,கடலோட்டி ,படகோட்டி ,படகோனிய

ஜப்பான் - நாரை,மருதை,செண்டை ,

பப்புவா நியூ குனியா - நான்மாடல், குமரி,பொன் பீ ,குறள்

மெக்சிகோ -திகள் ,சோழா, சேதுமால் ,சோழ ,தமிழி பாஸ்
ஐஸ்லாந்து- திங் வெளிர்-

இந்தோனேசியா - தென்கரை ,களிமாந்தன் ,மதுரை
ஆப்ரிக்கா -சன்சிபார் ,நாகமணி கோமுட்டி

துருக்கி -கடல் யோக,அதியமான் ,களமர் ,கலமர்

ஈரான் - கலமர், களமர் பழனி

பெரு - கலவோ ,பள்ளர்,மல்லர் சிலகா ,காஞ்சி

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.
இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை.
நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!
அதே போல்
பள்ளர் பீன்ஸ் என்று வழங்கப்படும் மொசைகொட்டையும் கடல் பயணத்தில் உணவிற்கு உதவும்
பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.பாய் மாற துணியின் பெயர் வடம்
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு தமொவோ என்ற பழங்குடியினர் குடியிருப்பில் வாங்கரி என்ற இடத்தில தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெண்கல மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பல கடற்கரைகளில் தமிழ் பெயர் உள்ளது
இப்படி கடல் சார் பயண தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த போது
பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் உள்ள தரவுகள் வந்த படியே உள்ளது
உலகின் பல துறைமுகங்கள் ஆமைகள் இனபெருக்கம் செய்யும் ஆற்றங்கரை பகுதிகளில் தான் அமைந்து உள்ளது
உலகின் வெப்பத்தை நாம் உணரமால் இருக்க வைக்கும் கடலின் மிக பெரிய மற்றும் சிறிய நீரோட்டங்களை தனது வழி தடமாய் வைத்து இருக்கும் ஆமைகளின் திறனை உணர்ந்த நமது கடலோடிகள் அந்த வழிகளை பாய் மரம் இல்லாத முகவை, மிதப்பு தெப்ப காலத்திலே கண்டுபிடித்து ,
பின்னர் தனது அறிவு சார் திறமையால் பருத்தியால் வெய்த பாய் மர துணியை பயன்படுத்தி பாய் மர கப்பல்களை இயக்கியதால் தான் உலக நாடுகளில் பல்லா என்ற பாய் மர துணி புழக்கத்தில் வந்து நம் பாய் மர துணியை மத்திய திரை கடல் பகுதியினர் பருத்தியின் பெருமையை உணர்ந்து தமிழகம் வர தொடங்கினர்
இன்றும் பாய் மாற துணிகளை பருத்தியால் செய்த மாதரியார் வாதிரியார் என்ற நெசவு சமுகம் நம் தென் தமிழக பாண்டிய நாட்டில் உள்ளது
இப்பொழுது நன்கு ஆராய்ந்து பார்த்தால் உலகின் முதல் கடலோடிகள் என்ற பெருமையை தமிழ் மொழியை பேசும் கடல் சூழந்த நம் நில மக்கள் தான் பெறுகிறார்கள்
இன்றும் உலகில் கடல் சார் மேலாண்மையின் சிறப்பை
மேலை நாட்டையும் கீழை நாட்டையும் அந்த காலத்திலேயே அறிந்து இருந்த நம் தமிழ் மக்கள் தமக்குள் தக்க வைத்து உள்ளார்கள்
ஆமைகள் என்று என்று சொன்னாலே
தமிழர்களின் நினைவிற்கு உடன் வருவது
"ஆமைகள் புகுந்த வீடும் அமீனா புகந்த வீடும் உருபடாது '
என்ற வழக்கு சொற்கள் தான்
கடல் கடந்த ஆமைகளை பின் தொடர்ந்த கடலோடும் மீனவ தமிழர்கள தன வீட்டை விட்டு கடலில் தொலை தூர நிலத்திற்கு சென்றதால் அந்த பெண்களின் சாபத்திற்கு ஆமைகள் உள்ளானதும்
கடல் விரும்பாத பனி நில மக்கள் கடலுக்கு செல்ல கூடாது என்ற சட்டம் போட்டதால் அதன் தொடர்ச்சியாக ஆமைகள் வெறுக்கும் நிலையை உருவாக்கி இருக்கலாம்
அல்லது சனி கிரகம் என்ற பெயர்க்கு மெதுவாக செல்வது என்ற வட மொழி பொருள் இருந்ததால் ,நம் வழக்கில் சனிக்கிரகத்திற்கு ஆமை என்ற பெயர ஏற்கனவே இருந்ததால் சனி புகுந்த வீடு உருபடாது என்ற பொருளுக்கு ஆமைகள் புகுந்த வீடு உருபடாது என்றும் வந்து இருக்கலாம்
ஆனால் தமிழர்களின் வாழ்வில் ஆமைகள் பல வடிவில் உள்ளது , சில பெண்களின் கழுத்தில் ஆமை தாலியாகவும் , நேர்த்திக்கு வேண்டும் போது ஆமைகள் வடிவத்தையும் ,பல கோயில்களில் ஆமைகள் சிற்பத்தையும் ,வைணவ மக்கள் கூர்மம் என வணங்குவதையும் ,மீனவர்கள் ஆல்லேய்லோ ஆமை எல்லாம் , குட்டி ஆண்டவர் என வணங்குவதையும் என் ஆய்வில் உலக நாடு கடற்கரை மக்கள் ஆமைகள் என்றால் செல்வம் என்று சொல்வது போல் நாமும் ஆமைகளை இனி மதிக்கலாம்

நமது சென்னை திருவான்மியூரில் இருந்து அடையாறு என்கின்ற கழிமுக பகுதிகளின் பழைய பெயரே ஆமையூர் என்று ஆம்பூர் நடுகல்லில்
"படுவூர் கோட்டத்து மேல் அடையாறு நாட்டு ஆமையூர் "
என்பதையும் கூட நாம் நினைவில் கொள்ளலாம்
அகண்டதமிழகத்தின் கடற்கரை முழவதும் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் ஆமைகளின் தாக்கங்கள் இருந்ததை நாம் நன்கு உணர முடியும்
ஆமைகள் வழியை தொடர்ந்து , நமது பாண்டியர் , தொல் பழங் குடிகளின் வரலாற்று ஆய்வையும் ஒருங்கிணைத்து செய்தால் தமிழர்கள் உலகில் எங்கு எங்கு சென்றார்கள் என்பது பற்றி நமக்கு மேலும் தெரிய வரும்
இன்று உலகில் முதல் மனிதர்கள் வாழ்ந்து இருக்ககூடும் என்று சொல்ல கூடிய முதல் ஆறு இடங்களில் மெட்ராஸ் கற்கால தொழிற்சாலை என்று வழங்கப்பட்ட வட தமிழகமும் வருகின்றது

எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் சில நண்பர்களின் துணைகொண்டு மட்டுமே இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த நான் இப்போது தான்

INTEGRATED "OCEAN CULTURE" RESEARCH FOUNDATION

ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாடு நிறுவனம் ஒரு கடல் சார் நிறுவனம் ஒன்றை நிறுவி ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறேன்

இதன் மூலம் தமது தமிழகம் இந்திய உலக கடற்கரைகளின் கடல் சார் வரலாறு பற்றி நாம் நன்கு அறியலாம் ,

நமது கடல் மேலாண்மையை பற்றி நாம் உலகறிய வைக்கலாம்

இந்த ஆய்வின் மூலம் மூலம் கடல் சார் அறிவு புவி சுழற்சி ,கப்பல்துறை முக ,கடல் வளம், கடல் சுற்று சூழல், பருவ காற்றுகள் பற்றிய ஆய்வுகள் , ,மீனவர்கள், மற்றும் பல துறைனரிடம் ஒருங்கிணைந்து பணிகள் செய்யலாம்

தமிழ் மணி

தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.

இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.
இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.
சோதனைக்குழாய் குழந்தை
உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.
தொலைக்காட்சி பார்த்தவர்
முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.
அணுவுருவில் நதிகள்
அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

ஆய கலைகள் 64.



ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக இணையத்தில் கிடைத்தது . அவை ,

01. எழுத்திலக்கணம்
(அக்கரவிலக்கணம்)
02. எழுத்தாற்றல் (லிகிதம்)
03. கணிதம்
04. மறைநூல் (வேதம்)
05. தொன்மம் (புராணம்)
06. இலக்கணம் (வியாகரணம்)
07. நயனூல் (நீதி சாத்திரம்)
08. கணியம் (சோதிட சாத்திரம்)
09. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
 ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக இணையத்தில் கிடைத்தது . அவை ,

01. எழுத்திலக்கணம்
(அக்கரவிலக்கணம்)
02. எழுத்தாற்றல் (லிகிதம்)
03. கணிதம்
04. மறைநூல் (வேதம்)
05. தொன்மம் (புராணம்)
06. இலக்கணம் (வியாகரணம்)
07. நயனூல் (நீதி சாத்திரம்)
08. கணியம் (சோதிட சாத்திரம்)
09. அறநூல் (தரும சாத்திரம்)
10. ஓகநூல் (யோக சாத்திரம்)
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)
16. மறவனப்பு (இதிகாசம்)
17. வனப்பு
18. அணிநூல் (அலங்காரம்)
19. மதுரமொழிவு (மதுரபாடணம்)
20. நாடகம்
21. நடம்
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)
23. யாழ் (வீணை)
24. குழல்
25. மதங்கம் (மிருதங்கம்)
26. தாளம்
27. விற்பயிற்சி (அத்திரவித்தை)
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)
30. யானையேற்றம் (கச பரீட்சை)
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)
35. மல்லம் (மல்ல யுத்தம்)
36. கவர்ச்சி (ஆகருடணம்)
37. ஓட்டுகை (உச்சாடணம்)
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)
39. காமநூல் (மதன சாத்திரம்)
40. மயக்குநூல் (மோகனம்)
41. வசியம் (வசீகரணம்)
42. இதளியம் (ரசவாதம்)
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)
47. கலுழம் (காருடம்)
48. இழப்பறிகை (நட்டம்)
49. மறைத்ததையறிதல் (முஷ்டி)
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)
51. வான்செலவு (ஆகாய கமனம்)
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
 

விஞ்ஞானி -


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

ஒரு விஞ்ஞானி விவசாயம் பற்றி அதுவும் மரபுசார் விவசாயம் பற்றி அக்கரை கொள்கிறார் என்பது அரிதிலும் அரிது. மரபுசார் ஆராய்ச்சியாளர்களே விதைகளை களவாடி அயல் நாடுகளில் விற்று பிழைகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நேர்மையான விவசாய விஞ்ஞானிகளுக்கு நேரும் அனுபவத்தை அதன் உள்ளரசியலை தமிழில் ஒரு திரைப்படமாக ’பார்த்தி’ என்ற (விஞ்ஞானி) இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். அதற்காக தமிழக மக்களின் சார்பக ஒரு தமிழ் மகன் என்ற தகுதியுடன் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

இந்த கதையாடலுக்குப் பிண்ணனியில் தொல்காப்பியம் முக்கியத்துவம் வாய்ந்தாக பேசப்படுகிறது. அதுவும் 3000 ஆண்டுகளுக்கு முன் என்ற முன்னுரையுடன். தொல்காப்பியரே தனது கைப்பட எழுதியதாக காட்டியிருக்கின்றனர். நமது விஞ்ஞானத்தின் ஆண்டு அதுதானா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் இந்த மட்டுமாவது நமக்கான பெருமையை ஏற்றுக் கொண்டோமா என்றால் இல்லை.

3000 ஆண்டுகளுக்கு முன்னே நமது முன்னோர்கள் கண்ட விவசாய விஞ்ஞானம் ஏன் வளர்ச்சியை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டவில்லை? இந்தக் கேள்வியை கேட்கவிடாமல் செய்ததின் சூழ்ச்சியில் ”வளர்ச்சி” என்ற வார்த்தையும் ”விஞ்ஞானம்” என்ற வார்த்தையும் முன் நிற்கிறது. இவ்வார்த்தைகளை முன்வைக்கும் முன் பாரம்பரியம் என்பதை ”பழமை” “பயனற்றவை” என்ற பதங்களால் “பதம்” பார்க்கப்பட்டிருக்கிறது. இதை நாம் இன்று வரை உணர்ந்தோரில்லை. ஆனால் விஞ்ஞானம் வளர்ச்சி என்ற போலி வார்த்தையும் பசப்பும் நம்மை ஆழ்குழியில் தள்ளியிருக்கிறது. நாம் அதில் விழுந்து கிடக்கிறோம் என்ற நிலையைக்கூட உணர முடியவில்லை. உணர்த்த வரும் ஒரு சிலரைக்கூட உலகம் இது தான் என நம்பவைக்க முயல்கின்றனர். நமது வரலாறு நமது எதிரிகளாளும் நம்மைப்போன்றே உள்ள நமது துரோகிளாலும் எழுதப்பட்டுள்ளது. அவற்றைத்தான் நாம் இன்று வரை படித்து வருகிறோம். ஆனால் பார்த்தி அவர்கள் தமது திரைப் படத்தின் மூலம் நமது வரலாற்றுப் பெட்டகத்திற்குக் கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

நம்மிடம் இருந்த அறிவையும் அதிகாரத்தையும் களவாடிய ”கள்ளக்கூட்டம்” நம்மையும் நமது இலக்கியத்தையும் ஆட்சி செய்கிறது, ஆதிக்கம் செலுத்துகிறது. அவற்றை பார்த்தி போன்றவர்களால் எதிர் கொள்ளப்படுகிறது. அவரின் சொந்த அனுபவமாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. படித்த இவரைப் போன்றோர்களுக்கு பல்வேறு தளங்களில் இருந்து பல அழுத்தங்கள் வரும் ஆனால் அவற்றை நமக்கேன் வம்பு என்ற மனநிலையில் எதிர்த்துப் போராடமல் விட்டுவிடுகின்றனர். காரணம் கற்ற கல்வி அவற்றைத்தான் போதிக்கிறது. போராட்ட குணத்தை முற்றிலும் அழித்து ஒழிக்கிறது. இது திட்டமிட்ட உளவியல் போர். இந்தப் போரை தனியொருவராக பார்த்தி சந்திக்கிறார் அதன் நியாய நிலைப்பாட்டை பொதுவெளிக்கு கொண்டும் வந்திருக்கிறார். அதன் வெளிப்பாடே இந்த திரைப்படம். இப்படித்தான் நாம் அவரைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

3000 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்களின் தீர்க்கதரிசனம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மாதம் ”மும்மாரி” பொழிந்த காலத்தே ”தாகம் தீர்த்தான்” நெல்லின் அவசியம் தெரிந்திருகிறது. மூன்றாம் உலகப்போர் தண்ணீர்க்கானது என்று ஒரு சில விஞ்ஞானிகள் இப்பொழுது சொல்ல ஆரம்பித்திருகின்றனர். இந்த நிலையில் திரு. பார்த்தி அவர்கள் ”தாகம்தீர்த்தான்” நெல்லின் அருமைகளையும் அதை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளித்திருக்கிறார். இந்த நம்பிக்கை என் போன்ற விவசாயத்தை உயிர் மூச்சாய் எண்ணுவோரிடத்தில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. இராமநாதபுரம், சிவகங்கை போன்ற வரண்ட நிலத்தில் விவசாயம் செய்து வலிகளை சந்தித்தவர்களுக்குத் தான் புரியும் தண்ணீரின் அருமை.

ஒரு திரைக்கலைஞனாக பார்த்தியை ஏற்க முடியவில்லை ஆனால் ஒரு சமூக அக்கரை கொண்ட விஞ்ஞானியாக எமது நெஞ்சில் உயர்ந்து நிற்கிறார். கதையை இன்னும் கொஞ்சம் வீரியத்துடன் சொல்லியிருக்கலாம். அவருக்கு தணிக்கைத்துறை பற்றிய பயம் காட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொள்ளவும் வைக்கிறது.

ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதன் அரசியலை உணர வேண்டிய தருனம். எனவே எல்லோரும் திரையரங்கு சென்று பார்ப்போம். மறக்காமல் திரு. பார்த்தி அவர்களுக்கு மானசீகமாக ”கை” குழுக்குவோம்.

இங்ஙனம்,

வே. பரிதிவேந்தன்.

சித்திரக் கவி நா நாகஉறவு.



நா நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக் காட்டப்பட்டுள்ளன. 

நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.

பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும், பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்)

பாடல் 1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

பாடல் 3.
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !

பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !

இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும். நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை), இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற் கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன)

தமிழில் விண்மீன் கூட்டங்களின் பெயர்கள் !



தமிழ் வழக்கப்படி நில உலகத்தைச் சூழ்ந்துள்ள வானத்தை 12 வீடுகளாகப் பகுத்து ஒவ்வொரு வீட்டிலும்
இரண்டேகால் விண்மீன் கூட்டங்களை (நட்சத்திரங்ளை) அடையாளமாகக் கொள்கின்றோம். ஆக 2.25 x 12 = 27 அடையாள விண்மீன் கூட்டங்கள் 360 பாகையில் இருக்கின்றன.

ஒவ்வொரு விண்மீன் கூட்டத்தையும் நான்கு பகுதிகளாகப் (பாதம் ) பகுத்தால் 27 x 4 = 108 பாதங்கள்.
எனவே மந்திரங்கள் 108 என்னும் அடிப்படையில் அமைகின்றன.

சமற்கிருத, ஆரிய முறைப்படி முன்னர் 28 நட்சத்திரங்கள் இருந்தன. பின்னர் அவர்கள் தமிழ் முறைக்கு மாறினர் (இதற்குச் சான்று பின்னர் தர வேண்டும்).

இக்குறிப்பில் இந்த விண்மீன் கூட்டங்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் என்ன என்பதை அறியத் தருகிறேன். ஒருசில சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாக இல்லாமல் இருக்கலாம். சில பெயர்கள் வெவ்வேறு கூட்டத்துக்கும் பயன்பட்டிருக்கின்றன. இவற்றை
அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கின்றேன். ஒவ்வொரு விண்மீன் கூட்டத்தின் பெயரும் ஒரு சில கருத்துகளின்
அடிப்படையில் அமைந்துள்ளது.

1. அசுவினி = ஆதிமீன், பரிமுகம், முதனாள்,

2. பரணி = அடுப்பு, முக்கூட்டு, பாகு, தாழி, கிழவன், காடுகிழவோள், நடுவனாள், பூதம், வேழம், யாமை, தராசு

3. கார்த்திகை = அறுமீன், அறுவாய், அங்கிநாள், அழற்குட்டம், தழல், எரி, அளகு, அளக்கர், ஆல், ஆறாமீன், இறால், நாவிதன்

4. உரோகிணி = உருள், தேர், ஊற்றால், ஐம்மீன், சகடு, சாகாடு, பண்டி, பேராளன்

5. மிருகசீரிடம் = திங்கள்நாள், இந்து, இந்திரன், ஐந்தானம், ஐந்தவம், நரிப்புறம், மாழ்கு

6. திருவாதிரை = செங்கை, செம்மீன், துணங்கை, யாழ்

7. புனர்பூசம் = அதிதிநாள், ஆவணம், எரி, கரும்பு, கழை, பாலை, பிண்டி, புணர்தம், வேய்

8. பூசம் = குடம், கொடிறு, தை, புசியம், புணர்மீன், வண்டு

9. ஆயிலியம் = அரவு, அரவம், அரவினாள், ஆயில்,
கட்செவி, கவ்வை, கவை, பாம்பு

10. மகம் = முற்சனி, ஆதிச்சனி, ஆதியெழுஞ்சனி, எழுவாய்யெழுஞ்சனி, கொடுநுகம், ஞெமலி, மாகம், மாசி, வாய்க்கால், வேள்வி, வேட்டுவன்

11. பூரம் = எலி

12. உத்தரம் = பிற்சனி, கதிர்நாள்,மாரிநாள்

13. அத்தம் (ஹஸ்தம்) = அங்கிநாள், கனலிநாள், அத்தநாள், ஐம்மீன், ஐவிரல், கைம்மீன், கைனி, களிறு.

14. சித்திரை = அம்பரம், அறுவை, ஆடை, சுவை, செவ்வி, துவட்டாநாள், நடுநாள், தூசு, நெய், நேர்வான், பயறு,

15. சுவாதி = அனிலநாள், சோதி

16. விசாகம் = சேட்டை, முற்றில், வியாகம்.

17. அனுடம் = தாலம், பனை, புள், தாளி, தேள், அனிழம்

18. கேட்டை = அழல், எரி, செந்தழல், தழல், ஒளி, துளங்கொளி, இந்திரன்

19. மூலம் = ஆனி, கொக்கு, சிலை, தேள்கடை

20. பூராடம் = உடைகுளம், முறிகுளம், நீர், நீர்நாள், புனல், மாரி, முற்குளம்.

21. உத்திராடம் = பிற்குளம்

22. திருவோணம் = அரி, மாயோனாள், உலக்கை, ஓணம், சோணை, நள், வயிரம்

23. அவிட்டம் = காக்கை, கொடி, தனிட்டை, விட்டம்\

24. சதயம் = குன்று, சுண்டன், செக்கு, சுண்ணம், வாருணி

25 பூரட்டாதி = இசைநாள், நாழி, நீர், பதம், முற்கொழுங்கால்

26. உத்திரட்டாதி = நாழிகை, மன்னன், முரசு, அறிவன், பிற்கொழுங்கால்

27. இரேவதி = கலம், தோணி, பஃறி, குலம், தொழு, சூலம்

சான்று நூல் பட்டியல்

1. தமிழ்க் கழக அகராதி - திருநெல்வேலி சைவ சித்தசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.
2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சென்னைப் பேரகராதி (MUTL).
4. நிகண்டுகள் (பிங்கலம், திவாகரம்)

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

தமிழ் எண்களின் தோற்றமும் வளர்ச்சியும்!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரி வடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சி துறையின் சுவடிகளில் கண்டால் இன்றைய 1,2,3,4,5,6,7,8,9,0 ஆகியவை தமிழ் எழுத்துக்களே என்பதை அறியலாம்.

இந்த தமிழ் எண்களை தமிழகத்துடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்த அராபியர்கள் கொண்டு போயினர்.அவர்களிடமிருந்து மேல் நாட்டினர் கற்று கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்.அவர்களுக்கு கிடைத்த அன்றைய வடிவமே இன்றைய எண் வடிவம்.

இன்று உலகெங்கும் எழுதப்படும் எண்கள் அராபி எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் அராபியர்களுக்கு இந்த எண்களின் வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்று கூறுகின்றனர்.அரபி எண்கள் என்றும்,இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறி கூறப்படும் எண்கள் பழைய தமிழ் எண்களே என்பது மேலே உள்ள படத்தை நோக்கின் உணரப்படும்

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு.

யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா.

'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.

ஆய்வு சொல்லும் முடிவுகள்: சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்டசோடியம் அளவாகும்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும்குழந்தைகள் ஆளாக நேரிடும்.

ப்ரீத்தி ஷா சொல்கிறார் . ''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.

ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது.

ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள்இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன.

பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல.

நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன். உண்மைதான்.

இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

காற்றைச் சுத்தப்படுத்தும் 
வீட்டுச் செடிகள்...!

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!

வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...

கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!

சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.

வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.

மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.

ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.

கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

வீட்டில் கொசு தொல்லையா.?

 கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!

கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி..!

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்...!

இந்த பதிவை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..! தீங்கு தரும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்.

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.

தமிழக தேசிய மரம் பனை மரம் தமிழர் காக்க வேண்டிய மரம் பனை மரம்.

சீரகம்

உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் ரொம்ப முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல் கொஞ்சம் அழுக்காய், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும் இந்த சீரகம். எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்” என விடாதிருக்கும் விக்கலுக்கு, திகில் பயமெல்லாம் காட்ட வேண்டாம்! 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.

அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அட்ம்பிடித்தால்,
சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும் இந்த ‘பஞ்ச தீபாக்கினி சூரணம்’.

“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.

சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

வணக்கம்;-




தமிழர்களின் மரபுகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் நான்காம் தமிழ்ச் சங்கம் பயணிக்கிறது.நாம் அரசியல் சார்பற்றவர்கள்.உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு தலைமையிடம் உருவாக்கும் முயற்சியிலும் நமது பணி தொடரப்போகிறது.தமிழ் மக்களுக்கு தரமான நூல்களையும் வெளியிடவும் உள்ளோம்.அரசியல் சார்பற்று தமிழ்,தமிழர் பற்றிய வரலாற்று மாத இதழும் வெளியிட உள்ளோம்.இது போன்ற பல செயல்பாடுகள் தமிழ் மக்களுக்கு நேரடியாக சென்று அடைய மாவட்டம் தோறும் நான்காம் தமிழ்ச் சங்கத்தை விரிவாக்க உள்ளோம்.சங்கத்தின் நோக்கம் இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளோம் எம்முடன் இணைந்து செயலாற்றவும் மற்றும் மாத இதழில் பங்குதாரராக விருப்பம் உள்ளவர்களையும் நான்காம் தமிழ்ச் சங்கம் அழைக்கிறது.எமது தலையாய நோக்கம் தமிழ்,தமிழர் வரலாற்றை உலகம் முழுவது ஆதரத்துடன் பரப்புவது அதற்காக உலகம் முழுவதிலும் உள்ள ஒத்த கருத்துள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைப்பது அல்லது நான்காம் தமிழ்ச் சங்கத்தை உலகம் முழுவதும் தமிழர்கள் எங்கெங்கு உள்ளார்களோ அங்கெல்லாம் விரிவாக்கம் செய்வது இது போன்ற நோக்கத்துடன் செயலாற்ற உள்ளோம் இதற்காக புரவலர்களையும்.புலவர்களையும்.தமிழ் ஆர்வலர்களையும்.இளைஞர்களையும் பணியாற்ற அன்புடன் அழைக்கிறது.உங்கள் பகுதியில் நான்காம் தமிழ்ச் சங்கம் கிளை அமைக்க அல்லது தொடங்க தொடர்பு கொள்ளவும்.86085 72345. naangaamthamilsangam@gmail.com.4thtamilorganisation@gmail.com

நீரழிவு நோய் என்றால் என்ன?


உடம்புநம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன்தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது.

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் "சுய கட்டுப்பாடுடன்" வாழவேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.
நீரழிவு நோய் மூன்று வகைப்படும்
வகை - 1: டயாபிடிஸ் (Type 1 diabetes)வகை - 2: டாயாபிடிஸ் (Type 2 diabetes)வகை - 3: ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

வகை- 1: நீரழிவு நோய்
இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
நீரிழிவு நோயானது தாய், தந்தையினரின் வழியாகவும், நெய், பால், கள், இறைச்சி போன்ற உணவுப் பதார்த்தங்களை பயன்படுத்துவதாலும், ஈரப் பொருள்கள் மற்றும் வெறுப்பைத் தரக்கூடிய உணவுப் பொருள்களை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது.
நீரழிவு நோயின் அறிகுறிகள்:-
சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். சிறுநீருக்குரிய நிறம், நிறை, எடை, மணம் போன்றவற்றுள் நிறம் தண்ணீரைப்போலும், நிறை அளவுக்கு அதிகமாகவும், எடை கனத்தும், மணம் தேன் போன்றும் காணப்படும். சிறுநீரானது, தெளிந்த நீர் போன்று அடிக்கடி வெளியேறும். வெளியேறிய சிறு நீர்த்துளிகள் சற்று உலர்ந்தவுடன் பிசுபிசுத்துக் காணப்படும். உடல் வலிமை நாளுக்குநாள் குறைந்தும், நாவறட்சி அதிகமாகவும் காணப்படும்.
பொதுப்பண்புகள்:-
உடல் மெலிவடைந்தும், தோலில் நெய்ப்பசையற்று வறண்டு சுருங்கி வெளுத்த மஞ்சள் நிறத்தையும் அடையும். நாவறட்சி, அதிக நீர் வேட்டை, அதிகமாக பசியெடுத்தும், உணவு சாப்பிட்ட சற்று நேரத்திற்குள் மீண்டும் பசியெடுப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்நோய் முதிர்ந்து தனக்கு துணையாகப் பலவகையான கேடுகளையும் உண்டாக்கும். உடல் சத்தை உருக்கிச் சர்க்கரையாய் நீர் வழியே வெளியேற்றும்.

சொறி, சிரங்கு, கட்டி முதலியவைகளை உருவாக்கி பல கேடுகளை உண் டாக்கும். பித்த நாடி விரைந்து நடக்கு மாயின் நீரிழிவு நோய் வரலாம்.

வகை- 1: நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல

இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.

உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின்
இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

வகை- 2: நீரழிவு நோய்
இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.

வகை- 2: நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்

பொதுவாக இது பரம்பரை நோய்

பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.

இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

வகை - 3: ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்:
கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க வேண்டும்.
தாராளமாக சேர்த்துக் கொள்ளும் உணவு வகைகள்:
1.சூப் மிளகு ரசம், தக்காளிப்பழரசம், (சர்க்கரையில்லாமல்) நீர்மோர், எலு மிச்சை ரசம் போன்றவை.

2. எல்லாவித பச்சைக் காய்கறிகள் (சாலட்) போன்றவை.

3.எண்ணெய், சர்க்கரை இல்லாமல் தயாரித்த ஊறுகாய்.
குறைவாக சேர்க்கக் கூடியவை:
1. ஒரு நாளைக்கு 300 மில்லிக்கு மிகாத பால் உபயோகித்தல் வேண்டும்.

2.எண்ணெய் - சூரிய காந்தி அல்லது ரிபைண்டு எண்ணெய் 2 முதல் 3 டீ ஸ்ன் (தினமும்)

3. கோழி-மீன் உட்கொள்ளும் போது 50 கிராம் -சிறிய அளவு- மிகாமல் உட் கொள்ளுதல் நன்று. (பொரிக்கப்படாமல்).

4. பழங்களில் ஆப்பிள். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, தர்பூசணி ஒன்று அல்லது சில துண்டுகள் தினமும் உட்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சரக்கரை, க்ளுகோஸ், வெள்ளம், தேன், ஜாம், ஜெல்லி, லட்டு, ப்ரிவி, போன்ற இனிப்பு வகைகள், பிஸ்கட், கேக், கலோரி சத்து அதிகமுள்ள பழங்களான வாழைப்பழம், மாம்பழம், அன்னாசி, சப்போட்டா, சீத்தாப்பழம், திராட்சை, உருளைக்கிழங்கு, சேனை, மரவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, முந்திரி, பாதாம், தேங்காய் போன்றவை, உலர்ந்த பழங்களான திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவை. நெய், டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற கொழுப்பு சத்துள்ள எண்ணெய், வகை.

முட்டை மஞ்சள் கரு, சீஸ், கீரிம் லிம்கா. தம்ஸ் அப் போன்ற குளிர் பானங்கள். பழரசங்கள் (சர்க்கரையுடன்) பொரித்த பண்டங்கள்.

இந்தியாவில் மூலிகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தான ஐ.சி.பி. 201-ஐ நீரிழிவு நோயாளின் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமில அளவை முழுமையாக நீர்த்துவிடுவதால் நீரிழிவு ஒழிந்துவிடும் என்று தெரியவருகிறது.

இரத்தத்தில் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது அதன் காரணமாகவே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. குளுக்கோசை விட இந்த கொழுப்பு அமிலமே (Fatty acid) சர்க்கரை வியாதிக்கு மூலமாகிறது. இரத்தத்தில் உள்ள இந்த கொழுப்பு அமிலம் நீக்கப்படும் பொழுது சர்க்கரை வியாதியும் மறைந்துவிடுகிறது.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சிகிச்சை: இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறயான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவரின் அலோசனைப்படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்ய வேண்டும். உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கிமான வாழ்வு உண்டு.
நீரிழிவு நோயின் முன்நிலை என்றால் என்ன?

நீழிழிவு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் நீழிழிவின் முன்நிலை பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.நீரிழிவின் முன்நிலை என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய ஆரம்ப கட்டமாகும்.

குழந்தைகள் பாடசாலைக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்னர் 'முன்நிலைப் பள்ளி'க்குப் போகிறார்களே அது போன்றது. ஆரம்பப் பாடசாலை எனவும் சொல்வர். அதே போல 'நீரிழிவின் ஆரம்பநிலை' எனவும் சொல்லலாம்.

இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சர்க்கரையின் அளவு (110 முதல் 125 வரை இருந்தால் “நீரிழிவின் முன்நிலை” எனலாம். இது 126க்கு மேல் அதிகரிக்குமாயின் அவருக்கு நீரிழிவு எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.

மற்றொரு பரிசோதனையும் செய்யப்படுவதுண்டு, இதனை குளுக்கோஸ் டொலரன்ஸ் டெஸ்ட் என்பர்.

50 முதல் 75 கிராம் வரை அளவுள்ள குளுக்கோஸ் கலந்த நீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு 2 மணிநேரத்தின் பின் குருதி குளுக்கோஸ் அளவை கணிப்பர்.

இது 140 ற்குக் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு இல்லை. 140 முதல் 199 வரை இருந்தால் அது நீரிழிவின் முன்நிலை ஆகும். 200க்கு மேல் இருந்தால் அவருக்கு நீரிழிவு இருக்கிறது என நிச்சயம் சொல்லலாம்.
உணவுக் கட்டுப்பாடு அவசியமா?
நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும்.