Thursday, March 13, 2014

திசை திருப்பட்ட ராஜீவ் கொலை வழக்கு !

ராஜீவ் கொலை வழக்கில் தமிழர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படும் இரண்டு பெயர், சுப்ரமணிய சாமி , திருச்சி வேலுசாமி.
திருச்சி வேலுசாமி அவர்களின் வாக்குமுலம் தான் ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.ஆனால் தமிழர்களை காப்பாற்ற அந்த வாக்குமுலம் பயன்படவில்லை.

வேலுசாமி அவர்கள் தனது புத்தகத்தில் சம்பவத்தின் அடிப்படையில் தான் குற்றம் சாட்டுகிறார், ஆதாரத்தின் அடிப்படையில் அல்ல.இதனால்
சுப்ரமணிய சாமீ க்கு சம்பந்தம் இல்லை என்ற அர்த்தம் இல்லை,ஆனால் வெறும் சுப்ரமணிய சாமிக்கு மட்டும் தான் சமந்தபட்டு உள்ளாரா.இதனால் தமிழர்கள் வெறும் சுப்ரமணிய சாமியை மட்டும் குற்றம் சொல்லி கொண்டு வழக்கம் போல தமிழ்நாட்டையே சுத்தி சுத்தி
வந்து கொண்டு இருகிறார்கள்.

வேலுசாமி அவர்கள் அவர்களின் புத்தகத்தில், அதனான் கஷோகி, சந்திர சாமி பற்றிய செய்திகள் குறைந்த அளவே உள்ளன.ஆனால் முக்கிய சூத்ரதாரியே இவர்கள் தான்.இதில் இவர் முக்கியமான நபரை பற்றி எழுதவே இல்லை.
அந்த முக்கியமான நபர் , புனா வை சேர்ந்த குதிரை வியாபாரியான 'ஹசன் அலி'.
2009 இறுதி கட்ட போர் நடந்து பின்பும் அவர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்து கொண்டே இந்த விசயத்தை வேலுசாமி அவர்கள் பேசி கொண்டு இருப்பது தான் நெருடலாக உள்ளது.
1) ஹசன் அலியை அவர் குறிபிடாமல் விட்டது ஏன் ?
2) ஜெயின் கமிசன் , கடைசி நாள் விசாரணையில் , பிரியாங்கா கலந்து கொண்டார், அப்பொழுது சுப்ரமணிய சாமீ, வேலுசாமி அவர்களின் கேள்விக்கு தடுமாறியபொழுது பிரியங்கா தனது கோப பார்வையால் சுட்டெரித்தார் என்று குறிப்பிட்டு உள்ளார், மேலும் சோனியாவை சந்தித்த பொழுதும் எல்லா விசயங்களையும் சொன்னதாகவும், அதை கேட்டு அதிர்ந்ததாகவும் எழுதி உள்ளார்.
இவ்வளவு சொன்ன பிறகும் , தனது கணவரை கொன்றவன் உடன் சேர்ந்து 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்தை கவிழ்த்தார்.அப்பொழுது சுப்ரமணிய சாமி கொடுத்த தேநீர் விருந்தில் சோனியாவும் கலந்து கொண்டார்.
3) சாமியுடன் சோனியா கை கோர்த்து அவர் தனது கண்டனத்தை தெரிவிக்க வில்லை, சோனியாவிற்கு இவர் மீது நம்பிக்கை இல்லை என்று அவர் நினைத்து இருந்தால் இன்று வரை காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருக்க மாட்டார்.
4) ராஜீவ் காந்தியை என்ற ஒரு உயிரை கொன்றதுக்காக ,சுப்ரமணிய சாமியை பிரிந்த வேலுசாமி அவர்கள், 160000 பேரை கொன்ற சோனியாவின் தலைமையின் கீழ் இன்று அளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
5) சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேலு சாமி அவர்கள் ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில்,வை கோ அவர்கள் மட்டும் ஈழ விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதாக சாடி உள்ளார்.
ஆனால், அதே ஈழ பிரச்சனையில் WHOLE SALE வியாபாரியான, இவர் ஆதரிக்கும் இவரது மச்சான் சீமானை ( சீமான் இவரை மாமா என்று தான் அழைக்கிறார் ) பற்றி எதுவும் சொல்லாமல் விட்டது ஏன் ?

திருச்சி வேலுசாமி குறிப்பிட்ட அத்தனை பேரிடமும் , சோனியாவிற்கு நேரடி தொடர்பு உண்டு. இவர்களுக்கு தொடர்பு பாலமாக இருப்பது 'ஹசன் அலி'.

திருச்சி வேலுசாமி ஆரம்பித்தார் , முடிவுரை நாம் எழுதுவோம்.

அடுத்த பகுதியில் ஹசன் அலி பற்றி தொடர்பு உள்ள சம்பவங்களை பற்றி அலசுவோம்.

No comments:

Post a Comment